வைத்தியர் ஷாபியின் விளக்கமறியல் நீடிப்பு

குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை எதிர்வரும் ஜுன் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் நீதவான் இன்று (11) வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
ஷாபி சிஹாப்தீன் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று குருநாகல் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வைத்தியர் ஷாபி - குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதேவேளை, இவருக்கு வழங்கப்பட்டிருந்த மூன்று மாத கால தடுப்புக் காவல் உத்தரவு இரத்துச் செய்யப்பட்டுள்ளது என பிரதி சொலிஸிட்டர் நாயகம் துசின் முதலிகே அறிவித்தார்.
அத்துடன், வைத்தியர் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தக் கூடிய சாட்சிகள் போதுமானதாக இல்லை எனத்  தெரிவித்து நேற்றைய தினம் வழங்கப்பட்ட தடுப்பு காவல் உத்தரவையும் இரத்துச் செய்வதாக பிரதி சொலிஸிட்டர் நாயகம் துசின் முதலிகே மன்றில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post