மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


ரணிலுக்கு கைகொடுக்குமா தமிழ் தேசிய கூட்டமைப்பு

(விஜித்தா)
அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.
இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியே அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்துள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கூட்டு எதிரணி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் சுதந்திரக் கட்சியும் ஆதரவு அளிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது .
பெரும்பான்மை இல்லாத ஐக்கிய தேசிய கட்சியின் வாழ்வும் சாவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவுகளிலேயே தங்கியுள்ளது.
சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்றும் நாளையும் விவாதம் நடத்தப்பட்டு நாளை மாலை 6.30 ம மணி அளவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.