மைத்திரிக்கு ‘ஆப்பு’ வைக்க ஆளும்கட்சி திட்டம்!

மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கத் தரப்பு முடிவு செய்துள்ளதாக ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.தனிநபர் பிரேரணையாக இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதால், தனி நபர் பிரேரணையை நாடாளுமன்றத்தில் இலகுவாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் குற்றவாளிகள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற சிறிலங்கா அதிபர் திட்டமிட்டுள்ள நிலையில், ஐதேக அரசாங்கம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.இந்த நிலையிலேயே, நாடாளுமன்றத்திலும் அரசாங்கத் தரப்பு பிரேரணை ஒன்றைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post