தொடரும் சீரற்ற காலநிலை;டெங்குக் காய்ச்சல் மீண்டும் பரவும் அபாயம்.

தற்போது நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால் டெங்குக் காய்ச்சல் மீண்டும் பரவும் அபாயமுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேல்இ சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகமாக பதிவாகுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளைஇ டெங்குக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் சிரமதானப் பணிகள், புகை விசிறும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தவிர எதிர்வரும் நாட்களில் க.பொ.த. உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறவுள்ளதால் பரீட்சை நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளை நுளம்புகள் அற்ற பகுதிகளாகப் பிரகடனப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதி வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட செயலகங்களில் சிரமதானப் பணிகளை மேற்கொள்ளுமாறு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாகவும் டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.