மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


குறுகிய நேரத்திற்குள் லண்டனை உலுக்கிய நான்கு துயரச் சம்பவங்கள்!!

பிரித்தானிய தலைநகர் லண்டனில் கடந்த 10 மணி நேரத்துக்குள் நான்கு இளைஞர்கள் வாள்வெட்டு சம்பவத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனின் பிரைட்டன் சாலை பகுதியில் இருந்து வியாழனன்று சுமார் 9.10 மணியளவில் அவசர உதவிப் பிரிவினருக்கு அழைப்பு சென்றுள்ளது.

தகவல் அறிந்த அவசர உதவிப் பிரிவினர், பொலிசார் மற்றும் மருத்துவ குழுவினருடன் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளனர்.

ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், சுமார் 9.50 மணியளவில் அவர் மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது. வாள்வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டவர் இளம் வயது நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இளைஞர் ஒருவர் வாள்வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டு தெற்கு லண்டனில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.


மூன்றாவதாக Purley ரயில் நிலையம் அருகே வாள்வெட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டதாகவும், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். அவரது காயங்கள் வாளால் கிழித்தது போன்று இருந்ததாகவும், ரத்த வெள்ளத்தில் அவரை மீட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொலை முயற்சியில் இருந்து அவர் தப்பியுள்ளதும், தம்மை அபாயப்படுத்தியவரை அவர் நேரிடையாக கண்டதாகவும் கூறப்படுகிறது.

நான்காவதாக, இன்று காலை சுமார் 7.40 மணியளவில் கேனிங் டவுன் பகுதியில் இருந்து வாள்வெட்டு காயங்களுடன் 20 வயது மதிக்கத்தக்க நபர் மீட்கப்பட்டதாகவும், ஆனால் அவரது நிலை தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.


கடந்த 10 மணி நேரத்தினிடையே நடந்த இந்த 4 சம்பவங்கள் தொடர்பில் இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக கூறும் பொலிசார்,

அவர்களிடம் இருந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

லண்டன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நடந்தேறும் வாள்வெட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.