குழந்தையினை ஈன்றெடுத்து தோட்டத்தில் புதைத்த தாய்; இரத்தப் போக்கால் தாயும் மரணம்; அதிர்ச்சி ரிப்போர்ட்!!

                                                                                                 - மலையக நிருபர் -
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை யுலிபில்ட் தோட்ட பகுதியில் ஆண் சிசு ஒன்றின் சடலம் தோண்டி எடுக்கபட்டுள்ளதோடு சிசுவை ஈன்றெடெடுத்த பெண் உயிர் இழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று (13) இந்த சம்பவம் இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

ஹட்டன் நீதிமன்ற நீதவான் ஜெயராமன் ட்ரொக்சியின் தலைமையில் விசாரணைகள் மேற்கொண்டதன் பிறகே குறித்த ஆண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டது. 

குறித்த பெண் திடீர் சுகயீனம் காரணமாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கபட்டுள்ள குறித்த பெண்ணின் சடலத்தை சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனை மேற்கொண்ட போதே இறந்த பெண்ணுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக வைத்தியசாலையின் ஊடாக ஹட்டன் பொலிஸாருக்கு அறிவிக்கபட்டதை அடுத்து ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். 

கொட்டகலை யுலிபில்ட் தோட்ட பகுதிக்கு சென்ற பொலிஸார் குறித்த பெண் வீட்டின் அறையில் குழந்தை ஒன்றை பிரவேசித்து வீட்டின் பின்புறத்தில் குழி தோண்டி புதைத்துள்ளதாகவும் குறித்த பெண்ணுக்கு அதிக குருதி வெளியேறிதை அடுத்து குறித்த பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டும் செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

குறித்த பெண்ணின் வீட்டின் அறையினுள் குறித்த பெண் அணிந்திருந்த இரத்த கறைகள் கொண்ட ஆடைகளையும் ஹட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர். 

குறித்த பெண்ணின் கணவர் கொழும்பு பகுதியில் தொழில் புரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

39 வயதுடைய 03 பிள்ளைகளின் தயாரான ஆர்.வசந்தகுமாரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு குறித்த பெண்ணுக்கு 12, 07 ஆகிய வயதுகளில் இரண்டு பெண் பிள்ளைகளும் 05 வயதில் ஒரு ஆண் பிள்ளையும் இருப்பதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

சடலமாக மீட்கபட்ட சிசுவின் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக டிக்கோய கிழங்கன் வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் பின்னர் இரண்டு சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கபட உள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.