மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


சென்னையில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க குடிநீர் ரயில் சேவை!!!

சென்னையில் நிலவும் கடும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க 65 கோடி ரூபா செலவில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி ஜோலார்பேட்டையில் இருந்து மேட்டுசக்கர குப்பத்தில்உள்ள தரை மட்ட நீர் தேக்க தொட்டியில் இருந்து பார்சம்பேட்டை அருகே வரை 3.5 கிலோமீட்டர் தூரம் ராட்சத பைப் லைன் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் முழுவீச்சில் நடந்தது. நேற்று முன்தினம் சோதனை ஓட்டப்பட்டது. தண்ணீர் பார்சம்பேட்டைக்கு வெற்றிகரமாக வந்தது. அங்குகிருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள குழாய்கள் மூலம் ரயில்வே வேகன்களில் தண்ணீரை நிரப்பினர்.

இந்நிலையில் இன்று காலை தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் மகேஷ் கொடியசைத்து குடிநீர் ரயிலை சென்னைக்கு இயக்கும் சேவையை தொடங்கிவைத்தார். வாழைத் தோரணங்கள்இ மலர் அலங்காரங்களுடன் பூஜைக்கு பிறகு குடிநீர் ரயில் புறப்பட்டது. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 2.50 லட்சம் லிட்டர் குடிநீருடன் காலை 7.20 மணி அளவில் புறப்பட்டது.

தற்போது வில்லிவாக்கம் வந்துள்ளது. இந்த நீர் அங்கு அமைக்கப்பட்டுள்ள குழாய் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்ப்படுகிறது. ஒருநாளைக்கு தற்போது ஒரு டிரிப் மட்டும் ரயில் நீர் சென்னைக்கு வந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.No comments

Powered by Blogger.