மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


இ.தொ.கா உடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒரு அரசியல் கூட்டணி அல்ல - பிரபா கணேசன்.

கொட்டகலையில் கைச்சாத்திடப்பட்ட ஆவணம் சமூக நலன் விரும்பி ஏற்படுத்தப்ப்ட் ஒரு அமைப்பேயொளிய இது ஒரு தேர்தலுக்கான கூட்டணியோ அல்லது அரசியல் கூட்டணியோ அல்ல.எனக்கோ எனது கட்சிக்கோ அரசியல் கூட்டணி இப்பொழுது தேவை படவில்லை. இக்கூட்டணியில் எதிர்மாறான கருத்துகளைக் கொண்ட அமைப்புகளும் சரி, அரசியல் கட்சிகளும் சரி தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு இணைந்து செயல்படலாம். இந்த அமைப்பிற்கு எவரும் தலைவராக நியமிக்கப்படவும் இல்லை. அதற்கான தேவையும் இல்லை.இது ஒரு பொது அமைப்பாகவே செயல்படும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக மேலும் தெரிவித்ததாவது,

இவ் அமைப்பின் முதல் கட்ட நிகழ்வு கொட்டகலையில் இ.தொ.காவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இன்னும் சில நாட்களில் வன்னி மாவட்டத்திலும் இவ் அமைப்பில் மேலும் பல அமைப்புகள் இணைக்கப்படும் பொழுது அங்கே ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைமையில் நிகழ்வு இடம்பெறும். அதே போல் வடக்கிலும் கிழக்கிலும் பலர் இவ் அமைப்பில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். ஓவ்வொரு பகுதியைச் சார்ந்தவர்களின் தலைமையில் அந்த மாகாணங்களில் இவ் அமைப்பின் நிகழ்வுகள் இடம்பெறவிருக்கின்றது. இது முற்றிலும் அரசியலுக்கு அப்பாட்பட்ட தமிழ் மக்களுக்கான குரலாகவே செயல்படும். இதற்கமையவே இவ் அமைப்பில் ஜனாநயக மக்கள் காங்கிரஸ் அங்கம் வகிக்கின்றது. இந்த அமைப்பில் இணையும் அனைத்து அரசியல் கட்சிகளோ அல்லது அரசசார்பற்ற நிறுவனங்களோ, சமூக அமைப்புகளோ, தங்களது இரு பிரதிநிதிகளை அமைப்பின் செயற்குழுவிற்கு பரிந்துரைக்கலாம். இச்செயற்குழுவே இவ் அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்கும். அரசியலுக்கு அப்பால் முற்றும் முழுதாக நாடு முழுவதும் வாழும் தமிழ் மக்களின் எண்ணங்களுக்கு முகங்கொடுப்பதே இந்த அமைப்பின் முழுமையான நோக்கமாகும். ஆரசியல் கூட்டணியாக இது ஒரு போதும் செயல்பட முடியாது என்ற அடிப்படையிலேயே நாம் இணைந்துள்ளோம்.

ஒரு சிலர் இக்கூட்டணியை அரசியல் கூட்டணியாக பார்க்கின்றார்கள். ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தற்பொழுது எவரது அரசியல் கூட்டணியிலும் அங்கம் வகிக்கவில்லை. அண்மையில் ஜனாதிபதியுடனான முரண்பாட்டுக்குப் பின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து விலகியுள்ளது. ஜனதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் சம்பந்தமாக பல அரசியல் கட்சிகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடாத்தி கொண்டிருக்கின்றோம். அரசியல் ரீதியான முடிவுகளை ஜனநாயக மககள் காங்கிரஸின் அனைத்து மாவட்ட செயற்குழுவின் ஊடாகவே எடுக்கப்படும். எது எப்படியிருப்பினும் உள்ளுராட்சிசபை, மாகாணசபை தேர்தல்களில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.