சுய தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்குதல்; சொத்தழிவுக்கான இழப்பீடு வழங்கும் பயனாளிகளை தெரிவு செய்யும் நிகழ்வு!!

                                                                                      - வவுனியா விசேட நிருபர் -
வவுனியா மாவட்ட சுய தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் யுத்த கால சொத்தழிவுகளுக்கான இழப்பீடு வழங்குதல் என்பவற்றுக்கான பயனாளிகள் தெரிவு நடவடிக்கை இன்று (03.07.2019) இடம்பெற்றது.

புனர்வாழ்வு அதிகாரசபையின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, யுத்த காலத்தின் போது ஏற்பட்ட சொத்தழிவுக்காக விண்ணப்பித்தவர்களுக்கான மதிப்பீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

அத்துடன், சுய தொழில் முயற்சியாளருக்கான கடன் வழங்குவதற்காக பயனாளிகளை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வும் இடம்பெற்றது.

இதில், தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் மற்றும் கடன்கள் என்பன விரைவில் வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் புனர்வாழ்வு அதிகாரசபையின் பணிப்பாளர் திஸாநாயக்கா, வவுனியா உதவி பிரதேச செயலாளர், வங்கி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post