பிள்ளையானை சந்தித்த முக்கிய அமைச்சர்; அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு!!!ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுக் கடந்த மூன்று வருடங்களாகச் சிறைவாசம் அனுபவித்துவரும் முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை நேரில் சென்று அமைச்சர் மனோகணேசன் சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு இன்றையதினம் காலை நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் மனோகணேசன் அரசியல் நலன் விரும்பிகளும் நண்பர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே பிள்ளையானைச் சந்தித்ததாக தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது பொதுவான நடப்பு ,அரசியல் சம்பந்தமாகவும் கடந்த கால, எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடியதாகத் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன்,

எதிர்கால அரசியல் நகர்வுகள் தொடர்பில் பேசிய விடயங்களைத் தற்போது தெரிவிக்க விரும்பவில்லை எனவும் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.