தமிழ் அரசியல் கைதியின் உடல்நிலை மோசம்.

யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை மங்களராஜா அடிகளார் அவர்கள் யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது,

மகஸீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதி கனகசபை தேவதாசனின் உடல்நிலை மோசமடைந்து செல்வதால் அது தொடர்பாக அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பவத்தின் பின்னணி


கடந்த 2008 ஆம் ஆண்டு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் எனக் கூறி தேவதாசன் கைது செய்யப்பட்டார்.

பங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டு அவரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதேபோன்றேஇ சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளிடம் இருந்து சித்திரவதை மூலமே வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

இந்த நிலையில், தேவதாசனுக்காக மன்றில் ஆஜராக சட்டத்தரணிகள் எவரும் முன்வராத காரணத்தால் தன்னுடைய வழக்கில் தானே வாதாடி வருகின்றார்.


தனது வழக்கிற்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக பிணை கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள அவரது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் மனோகணேசன் சந்திப்பு

அமைச்சர் மனோகணேசன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை குறித்த அரசியற் கைதியுடன் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளதாக மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் அமைச்சர் மனோகணேசனின் முகப்புத்தகப் பதிவில் "தேவதாசன் குடுப்பத்தினர் மூலம் அவருக்கு தகவல் சொல்லுங்கள். செவ்வாய்கிழமை அவரை காண சிறைச்சாலை வருகிறேன் என சொல்லுங்கள். தற்போது நீராகாரம் அருந்த சொல்லுங்கள். தற்சமயம் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'நாளை மற்றும் நாளை மறுநாள்' நிகழ்சிகளுக்காக மட்டக்களப்பு நோக்கி போய் கொண்டிருக்கின்றேன்"என பதிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post