வெளிச்சத்திற்கு வந்த சுயரூபம்….எலிமினேஷனில் சிக்கிக் கொண்ட மதுமிதா, மீரா!!

ஒரு குச்சி ஒரு செல்ஃபி என்ற பாடலின் குதூகலத்துடன் தொடங்கியது நேற்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சி. வழக்கம் போல் கவின் அண்ட் சாண்டி டீம் கேப்டன் மோகன் வருவதைத் தொடர்ந்து வர்றாரு வர்றாரு என்ற பாடலுக்கு இசையமைக்க ஆர்வத்துடன் சீறிப்பாய்ந்து கொண்டு அவர்கள் பாடலுக்கு ஏற்ப தன்னை பாவித்துக் கொண்டு வந்தார். தொடர்ந்து டெய்லி ஆக்டிவிட்டீஸ்க்காக சாக்‌ஷி தற்காப்பு கலை சொல்லி கொடுத்தார். இதையும் ஜாலியாகவே செய்து முடித்தனர் மற்ற போட்டியாளர்கள். அடிச்சுத்தூக்கு, ராஜாதி ராஜா ஆகிய பாடல்களை இந்த தற்காப்பு கலைக்கு பயன்படுத்தினர்.

எந்த இடத்திலும் இதுவரை அழாமல் இருந்த சாக்‌ஷி இந்த முறை தனது அம்மா – அப்பா ஞாபகம் வந்துவிட்டது என்று கூறி அழுதுக் கொண்டே இருந்தார். கவின், சரவணன், சாண்டி ஆகியோர் சைக்கிளை வைத்து கருத்து, விடுகதை சொல்லி விளையாடினர். இதைத் தொடர்ந்து முதல் லக்‌ஷூரி பட்ஜெட்டுக்கான ஷாப்பிங் செய்யப்பட்டது. மனதை திறந்த டாஸ்க்கில் பதில்கள், நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்ததால், இந்த வாரத்திற்கு மொத்த மதிப்பெண்களும் (3200) முழுமையாக வழங்கப்பட்டது.

இதன் பிறகு தெரியவந்தது ஒவ்வொருவருடைய சுயரூபமும். ஆம், நாமினேஷன் பிராசஸ் தொடங்கியது. இதில், மதுமிதா 6 வாக்குகள், மீரா 8 வாக்குகள், சாக்‌ஷி 2 வாக்குகள், கவின் 2 வாக்குகள், சரவணன் 2 வாக்குகள், சேரன் 5 வாக்குகள், ஃபாத்திமா பாபு 3 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்த வாரம் எலிமினேஷன் பட்டியலில் கவின், மீரா மிதுன், மதுமிதா, ஃபாத்திமா பாபு, சேரன், சாக்‌ஷி, சரவணன் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது.

இப்போது தான் தெரிந்தது. மனதில் ஒன்று வைத்துக் கொண்டு வெளியில் ஒன்று பேசி வருகிறார்கள். சும்மாவே பிடித்தது போன்று காட்டிக் கொண்டு ஒருவரையொருவர் பேசி பழகியுள்ளனர். ஆனால், உண்மையாகவே யாரும் பேசி பழகவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.

இதைத் தொடர்ந்து கடைசியா விடாது எடு என்ற வேடிக்கையான விளையாட்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில், ஒவ்வொருவரும் வித்தியாசமாக முகத்தில் வர்ணம் செய்து கொண்டு இந்த விளையாட்டை விளையாடி முடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், சேரன் ஏன், என்னோட பெயர் இடம்பெற்றது என்ற யோசனையில், சாக்‌ஷியிடம் ஆலோசனை செய்தார்.


வழக்கம் போல் கவின், இந்த முறையும் ஷெரின், அபிராமி, சாக்‌ஷி, ரேஷ்மா ஆகியோர் கூட்டணிக்காகவே பேசி வருகிறார் என்பது தெரியவருகிறது. சேரன் கூறியதைப் போன்று தர்ஷன் மற்றும் லோஸ்லியா இருவரும் தனியாகவே இருக்கிறார்கள் என்பது உண்மை தான். ஏனென்றால், அவர்கள் யாருடனும் கூட்டணியாகவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post