சற்றுமுன் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது!!!


பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும், சுகயீனம் காரணமாக நாரஹேன்பிட்ட பொலிஸ் வைத்தியசாலையில் இன்று காலை அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நாரஹேன்பிட்ட பொலிஸ் வைத்தியசாலைக்குச் சென்று பூஜித் ஜயசுந்தரவை கைது செய்துள்ளனர்.
நாட்டில் ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலை தடுப்பதற்கு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் , உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபர் அண்மையில் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post