மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


ஹங்குரன்கெத்த கபரகலை தமிழ் வித்தியாலய இரண்டு மாடி கட்டிடம் திறப்பு.

கல்வி அமைச்சின் 'அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் 13.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மத்திய மாகாண ஹங்குரன்கெத்த கபரகலை தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள ஆசிரியர் விடுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாடி கட்டிட திறப்பு விழாவும் பாடசாலை அதிபர் கே.கேதீஸ்வரன் தலைமையில் நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாடி கட்டிடத்தினை பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் அவர்கள் நாடா வெட்டித் திறந்துவைத்தார்.

இந் நிகழ்வில் மலையக ஆசிரிய முன்னணியின் செயலாளர் ரவீந்திரனும் வலப்பனை கல்வி வலய அதிகாரிகள் ,பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் ,எனப் பலரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments

Powered by Blogger.