மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


கட்டுநாயக்கவில் தரையிறங்கிய அமெரிக்க விமானத்தின் உள்ளே இருந்தது என்ன?!!

அமெரிக்காவின் சரக்கு விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று அதிகாலை வந்தடைந்தது.

அமெரிக்காவின் Western Global Airlines என்ற விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான McDonnell Douglas MD-11 விமானம் அதிகாலை 3.47 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்தது.

அமெரிக்க தயாரிப்பான இந்த விமானம், அதிகளவான பொருட்களுடன் நெடுந்தூரம் பயணிக்கக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது.

WGN 1710 இலக்க விமானம், பஹ்ரேனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தது.

சில நாடுகளிலுள்ள அமெரிக்க முகாம்களுக்கு இந்த விமானம் கடந்த நாட்களில் பயணித்துள்ளமை, இந்த விமானத்தின் பயண மார்க்கத்தை ஆராய்ந்த போது தெரியவந்தது.

ACSA உடன்படிக்கையின் கீழ், அமெரிக்க இராணுவத்திற்காக பொருட்களை ஏற்றி வந்த விமானமாக இது இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தில் பயணித்திக்கொண்டிருந்த USS John C. Stennis போர் கப்பலுக்கு, கட்டுநாயக்க ஊடாக ஏற்கனவே பொருட்கள் பரிமாற்றப்பட்டுள்ளன.

பஹ்ரேனில் இருந்து கட்டுநாயக்கவிற்கு கொண்டுவரப்பட்ட பொருட்கள், விசேட சரக்கு விமானங்களின் ஊடாக, கட்டுநாயக்கவில் இருந்து கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இவ்வாறு அமெரிக்க கப்பலுக்கு பொருட்களை கொண்டு செல்லும் போது, இலங்கை சுங்கம் அல்லது வேறு பாதுகாப்பு பிரிவுகள் சோதனைகளை மேற்கொள்ளவில்லை.

விமானம் வருகை தந்ததை மாத்திரம் உறுதி செய்த விமான நிலைய அதிகாரிகள், அதில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் தொடர்பான தகவல்கள் இல்லை என கூறினர்.

இந்த விமானம் தொடர்பில் எதனையும் அறியவில்லை என கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் சிவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் குறிப்பிட்டது.

விமான நிலையத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் பொருட்கள் சோதனைக்குட்படுத்தப்படும் போதிலும், விமானத்திற்குள் இருக்கும் பொருட்கள் சோதனை செய்யப்படாது என சுங்கப் பிரிவினர் கூறினர்.

No comments

Powered by Blogger.