மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


தொழில் போட்டியில் ஐஸ்கிரீம் நிறுவனத்தில் ஐஸ்கிரீமுக்குள் சிறுநீர் கழித்த வினேதப் பெண்!!

தனது வர்த்­தகப் போட்­டி­யா­ளரின் ஐஸ் கிறீம் தொகு­திக்குள் சிறுநீர் கழித்­தா­ரென அமெ­ரிக்­காவில் பெண் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

புளோ­ரிடா மாநி­லத்தைச் சேர்ந்த ஜுங் சூன் விப்சா எனும் 66 வய­தான பெண்ணே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

இவர் கடை­யொன்றை நடத்தி வரு­கிறார். இவரின் கடைக்கு அருகில் ஐஸ்­கிறீம் விற்­பனை நிலை­ய­மொன்றும் உள்­ளது. இரு கடை­க­ளுக்கும் ஒரே கழி­வறை பொது­வா­ன­தாக உள்­ளது. 
ஐஸ்­கிறீம் கடை நடத்­து­ப­வர்­க­ளுடன் ஜுங் சூன் விப்­சா­வுக்கு மோதல்கள் ஏற்­பட்­டி­ருந்­தன. இந்­நி­லையில், மேற்­படி ஐஸ்­கிறீம் கடை­யி­லுள்ள ஐஸ்­கி­றீம்கள் மீது தனது மூக்கைச் சிந்­தி­ய­தா­கவும் எச்சில் துப்­பி­ய­தா­கவும் ஜுங் சூன் விப்சா மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

ஐஸ்­கிறீம் தயா­ரிப்­புக்குப் பயன்­ப­டுத்­தப்­படும் வாளி­யொன்றில் சிறு கழித்­தா­ரெ­னவும் குற்றம் சுமத்­தப்­பட்டுள்ளது. 

அவரின் சில செயற்­பா­டுகள் கண்­கா­ணிப்புக் கெம­ராக்­க­ளி­லும பதி­வா­கி­யுள்­ளன. 
இந்­நி­லையில், கடந்த திங்­கட்­கி­ழமை ஜுங் சூன் விப்­சாவை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

ஜுங் சூன் விப்­சாவின் மேற்­படி நட­வ­டிக்கை கார­ண­மாக, மேற்­படி ஐஸ்­கிறீம் கடை பல தினங்­க­ளுக்கு மூடப்­பட்­டது. 

அத்­துடன்,பாதிக்­கப்­பட்ட பல்­லா­யிரம் டொலர்கள் பெறு­ம­தி­யான ஐஸ்­கி­றீம்கள் அழிக்­கப்­பட்­ட­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

No comments

Powered by Blogger.