சக்கரை வியாதிக்கு நிவாரணியாக இந்தப்பட்டை இருக்கும் போது கவலை ஏன்?! எப்படி சாப்பிடுவது?!

உலகில் அதிகம் பேருக்கு வரக்கூடிய ஒரு நோய் என்றால் அது சர்க்கரை நோயாகும். உலகம் முழுவதும் சுமார் 425 மில்லியன் வயதுக்கு வந்த மனிதர்கள் சரிக்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் சர்க்கரை நோய்தாக்கம் 64 சதவீதம் என்ற அபாயகரமான அளவில் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பொதுவாக சர்க்கரை நோய் என்பது நம் வாழ்க்கை முறையினால் வரும் ஒரு நோய் என்று கருதப்பட்டாலும், உடல் உழைப்பிப்பின்மை மற்றும் அதிகப்படியான அளவு கலோரி உள்ள உணவு உட்கொள்வதே சர்க்கரை நோயின் முக்கிய முதல் காரணமாக உள்ளது.

"சர்க்கரை நோய் நாம் முன்னே எதிர்பார்த்ததை விட மிக ஆபத்தான ஒன்று" என ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் எழுத்தாளர் கவிதா தேவ்கன் கூறுகிறார்.

இதய நோய், சிறுநீரக பாதிப்பு என பல நோய்கள் நம் உடலில் உண்டாக முன்னோடியாக சர்க்கரை நோய் இருக்கிறது.

இந்த நோயிற்கு முக்கிய காரணம் நாம் சாப்பிடும் உணவு. பொதுவாக என்ன உணவு சாப்பிட வேண்டும் என்ற கேள்வி அனைத்து சர்க்கரை நோய் பாதித்த நபர்களிடம் இருக்கும்.

அவர்கள் சாப்பிடும் உணவில் இலவங்கப்பட்டையை சேர்த்து கொண்டாலே போதும். பல பிரச்சினைகளுக்கு இது தீர்வு தரும்.

இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை நம் உடலில் உள்ள சில என்சைம்கள் சுரப்பை தூண்டுகிறது. இதன் மூலம் உடலிள்ள செல்கள் இன்சுலினுக்கு நன்கு துணைபுரிகின்றன.
அதே சமயம் இலவங்கப்பட்டையானது இன்சுலின் சுரப்பை மட்டுப்படுத்தும் என்ஸைமையும் கட்டுக்குள் வைக்கிறது.

இலவங்கப்பட்டையிலுள்ள hydroxychalcone என்ற மூலப்பொருளின் ஆக்சிஜனேற்ற பண்பால் இன்சுலினின் உணர்திறன் அதிகரிக்கிறது மற்றும் குளுகோசையும் வேகமாக குறைக்கிறது.

அதுமட்டுமில்லாமல், மற்ற சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தனிமங்களான குரோமியம், காப்பர், அயோடின், இரும்பு மற்றும் மாங்கனீசு போன்றவை உள்ளன.

எனவே சமைக்கும்பொழுது சிறிதளவு இலவங்கப்பட்டையை சேர்க்க மறக்காதீர்கள் அல்லது காலையில் தேநீர் அருந்தபொழுது சிறிதளவு சேர்த்து கொள்ளலாம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post