முல்லைத்தீவு தண்டுவான் அ.த.க பாடசாலையில் கல்விக் கண்காட்சி நிகழ்வும்;ஆசிரியர் கௌரவிப்பும்!!

                                                                                                          - முல்லை நிருபர் -
நேற்றைய தினம் (02-07-2019) முல்லைத்தீவு தண்டுவான் அ.த.க.பாடசாலையில் கல்வி கண்காட்சியும், க.பொ.த .சாதாரண தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வும் க.பொ.த உயர்தரம் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தல் மற்றும் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கையெழுத்துச் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு என்பன பாடசாலை அதிபர் 

திரு. கு.பஞ்சலிங்கம் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இன்நிகழ்வில் பிரதமவிருந்தினராக துணுக்காய் வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.ச.சஞ்சீவன் அவர்களும் சிறப்பு விருந்தினராக ஒட்டுசுட்டான் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.த.பங்கயற்செல்வன் மற்றும் கௌரவ விருந்தினர்களாக அயற்பாடசாலை அதிபர்கள், மற்றும் ஆசிரியர்கள்,கிராம சேவை உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பெருமளவானோர் கலந்து சிறப்பித்தனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post