கொழும்பு வாழ் பொதுமக்களுக்கு ஓர் அறிவித்தல்

(விஜித்தா)
கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று  காலை 9 மணி முதல் நாளை காலை 9 மணிவரை 24 மணித்தியாலங்களுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.
இதன்படி, கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை, கடுவளை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொட்டிக்காவத்த மற்றும் முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை மற்றும் சொய்சாபுர வீட்டுத்திட்டம் ஆகிய பகுதிகளுக்கே குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.
இதேவேளை, குறித்த காலப்பகுதியில் ஹோக்கந்தர பகுதியில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இலங்கைக் காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்படும் கொழும்பு நகரின் அபிவிருத்தித் திட்ட வேலைகள்  காரணமாக இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்சபை அறிவித்துள்ளது. 


0/Post a Comment/Comments

Previous Post Next Post