மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


SMART POLL தொடர்பில் யாழ் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்திபன் அவர்களின் ஊடக அறிக்கை.

கஸ்தூரியார் வீதியில் உள்ள Smart Lab pole தொடர்பில் அப் பிரதேச மக்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தைச் சேர்ந்த பெற்றோர்களால் நேற்று நடாத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தினைத் தொடர்ந்து அப் பகுதி மக்கள் Smart Lab pole னை தடைசெய்யுமாறு கௌரவ ஆளுனர் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்தனர்.

அவ்வகையில் நேற்று யாழ்.மாநகர சபை அதிகாரிகளுக்கு குறித்த Smart Lab pole பற்றிய கோப்புக்களுடன் சமூகமளிக்கமாறு அளுநர் 
அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் இன்று காலை சமூகமளித்த யாழ்.மாநகர சபை உயர்அதிகாரிகளுக்கு குறித்த Smart Lab pole வேலைத்திட்டத்தினை 10 நாட்களுக்கு இடை நிறுத்துமாறும் . இது தொடர்பில் ஆராய்வதற்க தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவை (technical evaluation committee) கௌரவ ஆளுநர் நியமிக்க இருப்பதாகவும் குறித்த குழு தருகின்ற தொழில் நுட்ப அறிக்கையைக் கொண்டு மேலதிக நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்;ளது.

கடந்த மாநகர சபை அமர்வுகளில் நாமும் இதே தொழில்நுட்ப அறிக்கையைத்தான் கௌரவ முதல்வர் அவர்களிடம் கோரியிருந்தோம். அது எங்களுக்கு தரப்படாமலே குறித்த கம்பங்கள் நிறுவப்பட தொடங்கி விட்டது. மீண்டும் தொழில்நுட்ப அறிக்கையை தாருங்கள் என்று கோரியதுடன் இதுபற்றி ஆராய்வதற்கென விசேட பொதுக் கூட்டத்தை கூட்டுமாறும் அதுவரை குறித்த வேலைத்திட்டங்களை இடை நிறுத்துமாறும் கௌரவ முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்து இருந்தோம்.

ஆனால் கௌரவ முதல்வர் அவர்கள் எங்களுடைய கோரிக்கைக்கு அமைவாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன் அடுத்து வந்த நாட்களில் நடைபெற்ற நிதிக்குழு கூட்டம் ஒன்றில் இவ் Smart Lab pole நிறுவப்படுவது எக் காரணம் கொண்டும் நிறுத்தப்பட மாட்டாது என்று உறுதிபடத் தெரிவித்தும் இருந்தார். 

ஆனால் தற்போது நாங்கள் பல தடவை கோரிய தொழில்நுட்ப அறிக்கையை பெறும் நோக்குடன் அதனைப் பெற்றுக்கொள்ளும் வரை அதனை ஆராய்ந்து முடிவு எடுக்கும் வரை இத் திட்டத்தை அளுநர் அலுவலகம் நிறுத்தியுள்ளது.

நாங்கள் கோரிய தொழில் நுட்ப அறிக்கை தந்திருந்தால் அல்லது நாங்கள் கோரிய விசேட பொதுக்கூட்டத்தை கூட்டியிருந்தால் இப் பிரச்சனை யாழ்.மாநகர சபையுடன் முடிந்திருக்கும். அதனை அவ்வாறு செய்யாமல் தொடந்தும் இத்திட்டத்தை முன்னெடுத்தன் காரணமாகத்தான் இதில் இன்று ஆளுநர் அலுவலகம் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆக எங்களுக்குக் இருக்கின்ற சில அதிகாரங்களையும் மத்திய அரசாங்கத்திடம் தாரைவாக்கின்ற செயற்பாடுகளுக்கு இச் சம்பவமும் ஓர் உதாரணம் ஆகும்.

No comments

Powered by Blogger.