யாழ் மானிப்பாய் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பில் சற்று முன் நால்வர் கைது!!!நேற்றைய தினம் இரவு யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொடிகாமத்தை சேர்ந்த செல்வராசா கவிகஜன் (23) என்பவர் உயிரிழந்ததுடன் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதே வேளை உயிரிழந்த இளைஞனின் சடலத்தை பார்வையிடுவதற்காக வைத்தியசாலைக்கு பார்வையிடவந்த நால்வர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட நால்வரும் கொல்லப்பட்டவருடன் தொலைபேசி ஊடாக இறுதியாகத் தொடர்பு வைத்திருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post