மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தங்கள் அமைச்சுப் பதவி தொடர்பில் தீர்மானம்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து ரிஷாட் பதியுதீன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதை அடுத்து முஸ்லீம்  அமைச்சர்கள் அனைவரும் ஒன்றாக தமது அமைச்சுப்பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

இது தொடர்பில் தீர்மானம் ஒன்றினை எடுப்பதற்காக நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இராஜினாமா செய்த 9 முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தங்கள் அமைச்சுப் பதவியை ஏற்க தீர்மானித்துள்ளதாக  உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இன்றைய கலந்துரையாடலில் எடுக்கப்பட் தீர்மானங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எவையும் குறித்த தரப்பினால் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.