மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட தொலைபேசிகளில் முஸ்லிம் பெண்களின் புகைப்படங்கள்

திவுலபிட்டிய - பொத்தவேல பகுதியில் கிடந்த சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றிலிருந்து முஸ்லிம் பெண்களின் புகைப்படங்கள் அடங்கிய இரண்டு கைத்தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் வீதியின் இருபுறமும் உள்ள காட்டை வெட்டும்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களே சந்தேகத்திற்கிடமான குறித்த பொதியை கண்டெடுத்து பல்லேவெல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 
பொலிஸாரின் முதற்கட்ட ஆய்வின் பின்னர், மீரிகம விமானப்படை தளத்தின் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு மேலதிக விசாரணைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
அங்கு கிடைத்த இரண்டு புதிய தொலைபேசிகள் சிம்கள் இல்லாதபோதும் இயங்கும் நிலையில் இருந்ததாகவும், தொலைபேசியின் முகப்பில் முஸ்லிம் பெண்களின் புகைப்படங்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளபட்ட தற்கொளைத் தாக்குதலின் பின்னர் சஹ்ரானின் மனைவி இரண்டு தொலைபேசிகளை தூக்கி எறிந்ததாக வாக்குமூலம் வழங்கியிருந்தார் .
அதன்படி அவர் வீசியதாக கூறிய  இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருந்தே குறித்த கைத்தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
மேலும் சஹ்ரானின் மனைவி அளித்த வாக்குமூலத்தின் படி கடந்த 29, 30 ஆம் திகதிளில் விசேட அதிரடிப்படையினர் மீரிகம திவுலப்பிட்டிய பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது உடைந்த தொலைபேசியின் பல துண்டுகள் மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.