மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


கண்டிய மன்னர்களின் கொள்கையினை பின்பற்றும் ஐ.தே.க; நினைவுபடுத்தப்படும் பௌத்தத்தை தழுவிய தமிழ் அரசன்!!

ஆட்சி செய்ய முடியாது என கூறியவர்கள் இன்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயற்சிப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

2015ஆம் ஆண்டு இருந்த அரசாங்கத்திற்கு எதிராக 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையில் மூன்று பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. அந்த பிரேரணைகள் மூன்றையும் அரசாங்கம் செயல்படுத்தவில்லை.

அதற்கு அமைய 2015ஆம் ஆண்டு மீண்டும் அரசாங்கம் ஆட்சி அமைத்திருந்தால் அந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பொருளாதார தடை வந்திருக்கும். அதற்கு முகங்கொடுக்க முடியாமையால் இரண்டு வருடங்கள் எஞ்சி இருந்த நிலையில் அவசர அவசரமாக தேர்தலுக்கு சென்றனர்.

அவ்வாறு சென்றவர்கள் இன்று ஆட்சியை பிடிக்க முயல்கின்றனர். அது முடியாத காரியம். அதற்காக அவர்கள் பல போராட்டங்களையும் நடத்துகின்றனர்.

முன்பு விஜேராஜசிங்க என்ற பௌத்த மன்னன் பெளத்தத்தை தழுவிய இலங்கையின் முதலாவது தமிழ் அரசனாக கருதப்பட்டான். அதேபோல் மடு தேவாலயத்தை அமைக்க இடம்பெற்று கொடுத்தவர் கண்டி அரசர் ஒருவர்.

இவற்றை மறந்து இன்று இனவாதத்தை தூண்ட எதிர்கட்சியினர் முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரம் கிடைத்தால் அன்று நாடாளுமன்றத்தில் நடத்து கொண்டதை போன்று சண்டையிட்டு, சொத்துகளுக்கு சேதம் விளைவித்து தம்மப்பத, பைபில் ஆகிய புனித நூல்களை வீசி ஏறிந்து கலகம் செய்வார்கள்.

அதேபோன்று தான் அவர்களின் ஆட்சியும் அமையும். நாடாளுமன்றத்தில் அவர்கள் நடந்துக் கொண்டதை போன்று பிரபாகரனும், செயற்படவில்லை. பிரபாகரனை பிரதிநிதித்துவப்படுத்திய பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் இருந்த போதும் அவர்களும் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை.

எனவே அவர்கள் போன்று மகிந்த அணியினர் நடந்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையே கண்டிய மன்னர்களின் கொள்கையாகும்.

அதாவது சிறுபான்மை இனத்தையும் சமநிலையில் நடத்த வேண்டும் என்பதே எமது கொள்கை. அதனூடாகவே நாடு முன்நோக்கி பயணிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.