வறட்சியான காலநிலை காரணமாக வவுனியா மூனாமடு குளத்தின் கீழுள்ள விவசாயம் முழுமையாக பாதிப்பு!!

                                                                                     - வவுனியா விசேட நிருபர் -
வரட்சியான காலநிலை நீடிப்பதனால் வவுனியா, மூனாமடுக் குளத்தின் கீழான விவசாய நடவடிக்கைகள் முழுமையாக பாதிப்படைந்துள்ளது. 

வவுனியா, புதுக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மூனாமடு குளம் வரட்சி காரணமாகவும், சிறுபோக நெற் செய்கைக்கு நீர் அதிகமாக இறைத்தமை காரணமாகவும் குளத்து நீர் வற்றியுள்ளது. 

இதன்காரணமாக குறித்த குளத்தின் கீழான 45 ஏக்கர் வரையிலான விவசாய நிலங்கள் நீர் இன்றி வரட்சியினால் பாதிப்படைந்துள்ளது. 

அறுவடைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் ஏற்பட்டுள்ள வரட்சியும், குளத்து நீர் வற்றியமையும் விவசாயிகள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post