மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


கூட்டமைப்பின் கோரிக்கைக்கு இணங்கிய தீர்வாகவே கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம்; சுமத்திரன்!!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் முழுமையான தமிழ் பிரதேச செயலகமாக செயற்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்த தமிழ் பிரதேச செயலகம் அனைத்து வசதிகளையும் கொண்டு சுயாதீனமாக செயற்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரத போராட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர், பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் போன்றோர் ஆதரவினை வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும் பிரதமருடன் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைய முழு நிதி அதிகாரங்களும் கொண்ட பிரதேச செயலகமாக மாற்றப்ட்டுள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.