மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிப்பு.நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து தலவாக்கலை ரயில் நிலையம் வரை புகையிரத பாதைக்கு கருங்கற்கள் போடும் பணியில் ஈடுப்பட்ட வந்த தொடருந்து ஒன்று பதுளை - கொழும்பு பிரதான ரயில் பாதையில் தடம் புரண்டுள்ளது.
இதனட காரணமாக மலையகத்துக்கான ரயில் சேவைகள் சுமார் மூன்று மணித்தியாலயங்கள் தடைபட்டதாக தெரிவிக்கப்படுகிறது..
இச் சம்பவம் நேற்று (02) இரவு 10 மணியளவில் இடம்பெற்றது.
அதன்பின் ரயில் பாதையை சீர்செய்யும் பணிகளில் ரயில் நிலைய ஊழியர்களும், அதிகாரிகளும் ஈடுபட்டதாகவும் எனினும் இன்றையதினம் அதிகாலை 1.30 மணியளவிலேயே ரயில் பாதையை சீர் செய்துள்ளதோடு, மலையகத்திற்கான புகையிரத சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post