யாழில் தந்தை செல்வா கலையரங்கம் திறப்பு

யாழ்.மத்திய கல்லூரியில் தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தினால் புதிதாக அமைக்கப்பட்ட தந்தை செல்வா கலையரங்கம் நேற்றைய தினம் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் எழில் வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் தந்தை செல்வா கலையரங்கினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் நாடா வெட்டி திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரகாஷன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,சமயத் தலைவர்கள் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.0/Post a Comment/Comments

Previous Post Next Post