கூகுல் மேப்ஸ்(Google Maps) சரியாக இயங்கவில்லையா?! இதோ ஐடியா!!

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்ய கூகுள் மெப்ஸ் மிகவும் சிறப்பான செயலியாக இருக்கிறது. இந்த செயலியை கொண்டு அருகாமையில் இருக்கும் பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள், உணவகங்கள் போன்றவற்றையும் தேடி அறிந்து கொள்ள முடியும்.

எனினும், சரியான இடத்திற்கு சென்றடைய செயலிக்கு துல்லியமான முகவரி வழங்க வேண்டியது அவசியமாகும். மேலும் பயனர் இருக்கும் பகுதியை சரியாக கண்டறிவது செயலிக்கு சிரமமான காரியம் ஆகும்.


இதுபோன்ற சூழல்களில் மேப் சரியான இடத்தை காண்பிக்க முடியாது. இதுதவிர ஜி.பி.எஸ். சிக்னல் அல்லது காம்பஸ் போன்றவற்றில் ஏதேனும் பிழை ஏற்பட்டாலும் மப் சரியாக இயங்காமல் போகலாம். இந்த சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும் பட்சத்தில் மப்ஸ் சேவையை சரியாக இயங்க வைக்கும் வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.

எனினும் இவற்றை பின்பற்றும் முன் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஜி.பி.எஸ்.: இது சாட்டிலைட்களை பயன்படுத்தி அதிகபட்சம் 20 மீட்டர்களுக்குள் லொகேஷனை கண்டறிந்து விடும்.

வைபை: அருகாமையில் இருக்கும் வைபை செயலி லொகேஷனை அறிந்து கொள்ள உதவும்.

மொபைல் நெட்வொர்க்கள்: இவை சரியான லொகேஷனை வழங்கும். மேலே கொடுக்கப்பட்டவற்றில் ஏதேனும் ஒன்றில் சிக்னல் சரியாக இயங்கவில்லை எனில், கூகுள் மேப்ஸ் சரியான வழியை வழங்க முடியாமல் போகும். இனி இந்த பிரச்சினையை சரி செய்யும் வழிமுறைகளை பார்ப்போம்.

வழிமுறை 1: ஜி.பி.எஸ். கலிபரேட் மப்ஸ் சரியான லொகேஷனை காண்பிக்காத போது இது பயன்தரும்.
1 அண்ட்ரோய்ட் ஸ்மார்ட்போனில் கூகுள் மப்ஸ் செயலியை திறக்க வேண்டும்
2 காம்பஸ் கேலிபரேட் ஆகும் வரை எட்டு வடிவில் ஸ்மார்ட்போனை திருப்ப வேண்டும்
வழிமுறை 2: ஹை அக்யூரசி மோடை ஒன் செய்ய வேண்டும்
1 அண்ட்ரோய்ட் ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் செல்ல வேண்டும்
2 இனி லொகேஷன் அப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
3 லொகேஷன் சர்வீசஸ் ஒப்ஷனை ஓஃப் செய்ய வேண்டும்
4 இனி மோட் அப்ஷனில் ஹை அக்யூரசியை க்ளிக் செய்ய வேண்டும்
வழிமுறை 3: வைபை இணைப்பில் இணைந்து பின் நெட்வொர்க்கை சரி பார்க்க வேண்டும். இது லொகேஷன் அக்யூரசியை பூஸ்ட் செய்யும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post