ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் சி.வி விக்னேஸ்வரன் !!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தம்மை போட்டியிடுமாறு சிறிலங்கா சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 


கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி தமது ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை அறிவித்திருந்தது.

இந்நிலையில் இதுவரை ஏனைய கட்சிகள் தமது வேட்பாளர் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிப்புக்கள் எவையும் வெளிவிடாத சூழலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தம்மை போட்டியிடுமாறு சிறிலங்கா சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.