நான் யார்? நான் உடலா? அல்லது நான் மனமா? ஆன்ம ஈடேற்றத்திற்கான ஆன்மீக தொகுப்பு!!

ஆன்மீகத்தின் பால் நாட்டம் கொண்ட ஆன்மீக மெய்யன்பர்களுக்கு இனிய வணக்கங்களோடு எம் சற்குரு நாதர் மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினது அருள் ஆசியும் உரித்தாகட்டும்.


கடந்த பல காலங்களாக ஆன்மீகம் பற்றியும் ஆன்மீகத் தேவை பற்றியும் அதனை உணர்ந்து தெளிவடைந்திட ஞான குரு ஒருவரின் வழிகாட்டலின் அவசியம் பற்றியும் தொடர்ச்சியாக ஆன்ம ஈடேற்றம் பெற்றுய்வதற்கான சுவாமிகளால் அருளப்பட்ட ஆன்மீக உபதேசப் பெருங்கடலில் இருந்து சில முத்துக்களை கோர்வையாக்கி பக்தர்களுக்காக இணையத்தளங்கள் வாயிலாக வெளியிட்டு வருகிறோம்.

அதன் தொடர்ச்சியாக "நான் யார்? நான் உடலா? அல்லது நான் மனமா?" எனும் ஆன்மீக விசாரங்கள் நிறைந்த ஆன்ம ஈடேற்றத்திற்கான ஆன்மீக தொகுப்பினை வழங்குகிறோம்.

நான் யார்?

நான் என்று நாமெல்லோரும் நினைத்திருக்கும் மனித சரீரமானது குழந்தைப் பருவத்தில் சிறிய உடலாக காட்சியளித்தது பின்னர் சிறிது சிறிதாக படிமுறை வளர்ச்சியினை எட்டி பெரிய உடல் அமைப்பினை உடைய மனிதர்களாக வாழ்கிறோம் இருந்தும் குறிப்பிட்ட வயது வந்தவுடன் உடலின் வளர்ச்சி நிறைவுக்கு வருகிறது பின்னர் உடல் முதிர்ச்சி ஏற்படுகிறது இந்த நிகழ்வு சாதாரண நிகழ்வாகவே கருதி நாம் கடந்து பயணப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் உடலானது உண்ணும் உணவின் மூலம்தான் பருவ வளர்ச்சியினை எட்டுகிறது என்றால் ஏன் குறித்த வயதின் பின்னர் அது மேலும் வளராமல் தடைப்பட்டு நிற்கிறது. 

ஏனெனில் மனிதர்கள் பிறப்பிலிருந்து இறக்கும் வரையில் உணவினை உட் கொள்வதனை நிறுத்துவதில்லை நிற்க விஞ்ஞானம் கூறுவது உடலினுள் ஹார்மோன் சுரப்பிகளின் சுரப்புகளால்தான் உடல் வளர்ச்சி படி முறை இடம் பெறுவதாகவும் குறிப்பிட்ட காலப்பகுதியில் அந்த சுரப்புகள் மட்டுப் படுத்தப்படுவதாகவும் கூறுகிறது; அவ்வாறெனில் அந்த சுரப்பிகளையும் சுரப்புகளையும் கட்டுப் பாட்டில் வைத்திருப்பவர் யார்? எனும் வினா தோன்றுகிறதல்லவா! எப்படித்தான் நாம் மாறி மாறி வினாக்களை தொடுத்தாலும் விஞ்ஞானம் எமது அஞ்ஞானத்தை போக்கி மெய் ஞானத்தை நல்கிடாது ஏனெனில் அது உடல் சார்ந்த தேடலுக்கான தீர்வுகளை மட்டுமே நல்கக்கூடியது ஆனால் மெய்ஞானமானது அறிவு சார்ந்த ஆழ்மனத்தினையும் அதன் இயக்கம் பற்றியும் தெளிவினை தரவல்லது.

சிறு குழந்தையாக நாம் இருக்கும் போது பசி வந்தால் அழுகிறோம் அங்கு மொழியென்பது குழந்தையான எமக்கு இல்லையல்லவா! அதே போல தூக்கம் வந்தால் அழுகிறோம் தாயின் தாலாட்டில் உறங்கி விடுகிறோம் இவ்வாறு மொழித் தொடர்பின்றிய ஒரு செயலினை தக்கவாறு உணர்ந்து பசிக்கு குழந்தை அழுதால் உணவு தரப்படுகிறது உறக்கத்திற்கு அழுதால் தாலாட்டு பாடி மடியில் உறங்க வைக்கப் படுகிறது அதுவே உபாதைகள் ஏற்பட்டால் மருந்தூட்டப்படுகிறது இவ்வாறு குழந்தைகளின் தன்மைகளை அறிந்து அவர்களுக்கான தேவைகள் நிறைவு செய்யப்படுகிறது. 

குழந்தை சற்று வளர்ந்து விட்டது மொழியினையும் கற்று விட்டது அந்த குழந்தைக்கான உணவு உடை உறையுள் என தேவைகள் அதிகரிக்கிறது; தாய்ப்பாலினை உணவாகவும் தாய் மடியினை உறையுளாகவும் உடையாக சிறிய துணிகளுமே தேவைப்பட்ட அதே குழந்தைக்குத்தான் சற்றே உடல் வளர்ச்சியினை எட்டியதும் தேவையின் அளவு அதிகரித்து செல்கிறது எது வேண்டுமானாலும் கேட்டுப் பெற வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. 

ஏன் நாமும் நமது தேவைகளும் சிறு குழந்தைகளாக இருக்கும் போது கேட்காமலேயே நிறைவேறியது ஆனால் வளர்சியடைந்ததும் கேட்டும் கிடைக்காத நிலைக்கு நாம் உள்ளோம் என்று சிந்தித்தால் பல விடயங்கள் புலனாகும்.

ஏழை வீட்டில் பிறந்த குழைந்தைகள் தொடர்ந்தும் ஏழ்மை நிலை வாழ்க்கையினையும் செல்வந்தர்கள் வீட்டில் பிறந்த குழந்தைகள் தொடர்ந்தும் செல்வந்தர்களாக வாழும் நிலையினை நாம் சமூகச் சூழலில் அவதானித்துக் கொண்டுதானே இருக்கிறோம் ஆனால் ஏன்? எதற்கு? என்று சிந்திக்கவில்லை இது பௌதீகவியல் தாக்கமா? அல்லது உளவியல் ரீதியான தாக்கமா? என்று ஆராய தொடங்குவோமானால்; பௌதீகவியல் எனில் வாழும் இடம் சார்ந்த சூழலைக் குறிக்கிறது உளவியல் எனில் உளம் சார்ந்த தாக்கத்தினை குறிக்கிறது; ஆனால் ஒரு மனிதனின் வாழ்க்கை முறையில் பௌதீகவியல் எனப்படும் வாழும் சூழல் சார்ந்த எண்ணம் குணம் தன்மைகளே முதலிடம் வகிக்கின்றன அந்த எண்ணம் குணம் தன்மைகளின் தாக்கத்தினை சிறு பராயம் முதலாகவே மனதளவில் உள்வாங்கி வாங்கியே மனமும் அதற்கு இசைவாக பழக்கப்பட்டுவிட்டது அதுவே உளவியல் தாக்கமாக மாறி அவர்களது வாழ்க்கை பயணத்தினை தீர்மானிக்கும் கரும வினைகளென பெயர் பெறுகிறது.

இவ்வாறு எதிர்மறையான விடயங்கள் சார்ந்த சூழலில் வாழ்பவர்களுக்கு எதிர்மறையான எண்ணக் கருக்களே மனதில் அதிகமாக பதிகிறது அந்தப் பதிவே அவர்களின் செயற்பாட்டில் பிரதிபலிக்கிறது அந்த பிரதிபலிப்புகளால் ஏற்படும் நன்மை தீமைகளுக்கு சம்மந்தப் பட்டவர்களே பொறுப்பாளியாகிறார்கள்; அவர்கள் ஏன் பொறுப்பாளியாக கருதப்படுகிறார்கள் எனில் எதிர்மறையான எண்ணம் கொண்ட சூழலில் வாழ்ந்து எதிர்மறையான எண்ணங்களை அல்லது விடயங்களை தன் மனதில் அவர்கள்தானே பதிவேற்றினார்கள் அந்தப் பதிவுதானே அவர்களை அதாவது அவர்களின் உடலினை இயக்கும் சக்தியாக அங்கு செயலாற்றுகிறது எதிர்மறையான எண்ணங்களால் செயல்படுத்தப்படும் உடலால் செய்யப்படும் காரியங்கள் எவ்வாறு நேர்மறையான விடயங்களை பிரதிபலிக்கும்? உதாரணத்திற்கு இசைத்தட்டு (CD,VCD,DVD) ஒன்றில் கணணி ஒன்றிலிருந்து ஒருவர் சினிமா பாடல்களையும் இன்னொருவர் பக்திப் பாடல்களையும் ஒலிப்பதிவோ அல்லது ஒளிப்பதிவோ செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். 

பாடல் பதிவேற்றிய இசைத் தட்டினை வானொலியிலோ தொலைக்காட்சியிலோ போடும் போது சினிமாப் பாடலுக்கு பதிலாக பக்திப் பாடலோ பக்திப்பாடலுக்கு பதிலாக சினிமா பாடலோ ஒலிப்பதில்லையே எந்தப்பாடலை எந்த இசைத்தட்டில் பதிவேற்றினோமோ அந்த இசைத்தட்டிலுள்ள பாடல்கள்தானே ஒலிக்கும் அது மாறி ஒலிக்கவில்லை என்பதற்காக வானொலிப் பெட்டி மீதோ தொலைக்காட்சி மீதோ கோபம் கொள்ளலாமா? நாம் எதனைப் பதிவேற்றினோமோ அதனைத்தானே மின் சாதனங்கள் ஒலிபரப்பின அப்போது அதற்கான பொறுப்பாளி யார்? இசைத் தட்டா? இல்லை பதிவேற்றியவரா? மூலகாரணமானவர் பதிவேற்றியவரே ஆக அவரேதானே அதற்கான பொறுப்பாளி.

இந்த உதாரணம் போலத்தான் சூழலில் பல விதமான எண்ண அலைகள் வாழ்க்கை முறைகள் செயல்கள் ஆளாளுக்கு வித்தியாசமாகவே இருக்கும் ஆனால் எந்த விடயத்தினை உள் வாங்கினால் நல்ல விடயங்கள் நிகழும் எந்த விடயத்தினை உள் வாங்கினால் தீய விளைவுகள் ஏற்படும் என பிரித்தறிவதற்கான அறிவான பகுத்தறிவினையும் எமக்கு படைத்த இறைவனே அருளியுமுள்ளார் ஆனால் மனிதர்கள் பகுத்தறிவின் பால் தன் மனதினை திருப்பிடாமல் மனதை மயக்கும் அறிவுடனான தொடர்பினோடு பின்னிப் பிணைந்துள்ளார்கள் அதன் காரணமாகத்தான் சினிமா பாடலை பதிவேற்றி வைத்துக் கொண்டு பக்திப்பாடல் வானொலியில் வரவில்லையே என்று வானொலி மீது கோபம் கொள்வதனைப் போல மனிதர்கள் தங்கள் தங்களுக்குள்ளாகவே பிரச்சினைகளை வளர்த்துக் கொண்டே போகிறார்களே தவிர தீர்வினை எட்டமுடியவில்லை; இந்த ஆன்மீக விளக்கமானது உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும்.

ஆனால் ஒரு சில ஏழைக் குடும்பத்து குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி நன்றாக படித்து பட்டம் பெற்று உயர் உத்தியோகத்தில் அமர்ந்து பெரும் செல்வந்தர்களாக வாழ்வதுவும் பணக்கார குடும்பத்து குழந்தைகள் ஊதாரிகளாக செலவழித்து விட்டு வீதியில் பிச்சையெடுப்பதுவும் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

காரணம் ஏன் என ஆராய்ந்தால் ஏழையாக இருந்த குழந்தைக்கு அவர்களின் தாய் தகப்பன் மனதிற்கு ஊட்டி வளர்த்த விடயம் நேரான விடயங்களாகவே இருந்திருக்கும் தாம் பின்தங்கிய நிலையிலிருந்தாலும் தன் பிள்ளை உயர்வாக வாழவேண்டும் எனும் எண்ணங் கொண்டு ஏழ்மையின் நிலையின் விளைவினை எடுத்துக் கூறி செல்வத்தின் உயர்வினையும் உயர்த்திக் கூறிகூறியே வளர்த்திருப்பார்கள் அந்த விடயம் ஒன்றையே குறிக்கோளாக மனதில் சிறு பராயம் முதலாகவே பதித்துக் கொண்ட அக் குழந்தை பெரியவனானதும் தனது குறிக்கோளிலிருந்து மாறாமல் தாய் தந்தையரின் சொல்லினையே மனதில் பதித்துக் கொண்டு செயலாற்றி குறித்த இலக்கையும் எட்டி அந்த செயலின் பலனாக செல்வத்தையும் உயர்தர வாழ்க்கையினையும் சமூகத்தில் அந்தஸ்த்தினையும் அனுபவிக்கிறார்கள் .

ஆனால் எந்த குறிக்கோளுமற்று தன் தாய் தந்தையர் சேமித்த செல்வத்தின் மதிப்பினை உணராது ஊதாரியாக கெட்ட எண்ணங் கொண்ட நண்பர்களோடு கூடி உல்லாசமாக செலவு செய்து திரியும் போது தாய் தகப்பனின் சேமிப்பு குறைந்து கொண்டே வருகிறது ஏனெனில் அவர்களின் செல்வத்தினை தொடர்ந்தும் பேணிப்பாதுகாப்பதற்கான கல்வியோ அதன் மூலமான ஒரு தொழிலோ அல்லது சொந்த வருமானத்தை தரக்கூடிய எந்த செயற்பாடுகளையோ அந்த நபர் கடைப்பிடித்திருந்திருக்கமாட்டார் மாறாக இருக்கிறதுதானே செலவு செய்வோம் நம்மைக் கேட்க யார் இருக்கிறார்கள் எனும் கீழான எதிர்மறை எண்ணமே அவரை சில காலத்தில் வீதியில் நின்று பிச்சை எடுக்க வைத்திருக்கும் இது ஒரு சுய அலசல் மூலமாக வந்த கருத்து இதுவே நிதர்சனம்.

இதுவே ஒருவர் திருமணம் செய்கிறார் வாழ்க்கையினை நிவர்த்திக்க சிறியளவிலான செல்வமே அவர் வசமிருக்கிறது என வைத்துக் கொள்வோம் இவ்வாறு காலங்கள் உருண்டோடும் போது அவர் வைத்திருந்த செல்வங்கள் கரைந்து விட்டன மீதி வாழ்வினை தளம்பிலின்றி அவரால் வழிநடாத்திடத்தான் முடியுமா? இல்லைதானே! அங்குதான் வாழ்க்கை போராட்டம் ஆரம்பிக்கிறது செல்வம் இருக்கும் போது சுமூகமாக பயணித்த கணவன் மனைவி எனும் உறவில் மெதுவாக விரிசல் ஆரம்பிக்கிறது அந்த விரிசலே அவர்களின் வாழ்வில் பெரிய பெரிய துன்பங்களை ஏற்படுத்துகிறது; இந்த விரிசலுக்கான காரணத்தை ஆராய்வோமானால் ஆண்மகனை நம்பி ஒரு பெண் குடும்ப வாழ்விற்குள் காலடி எடுத்து வைக்கிறாள் ஆணும் தான் சேமித்த செல்வங்களை கொண்டு வாழ்க்கைப் பயணத்தினை தொடர்கிறான் இவ்வாறு தொடரும் போது.

தனது புத்தியெனும் பகுத்தறிவின் மூலம் வைத்திருக்கும் சிறிய செல்வத்தினை அளவு குறையாமல் காப்பாற்றிட நிரந்தர வருமானத்தை நல்கக்கூடிய தொழில் ஒன்றினை தொடங்கி செயற்படுத்தியிருப்பான் அவ்வாறு அவன் தொழிலினை செய்திருந்தால் எதிர்பார்ப்புக்களோடு மனைவியாகிய அந்தப் பெண்ணும் மனம் கோணாமல் அன்பானவளாக என்றென்றும் கணவனுக்கு சேவகம் செய்பவளாக குடும்பத்தினை கவனித்தும் கொண்டிருந்திருப்பாள் ஆனால் குறிப்பிட்ட காலத்துக்கு மாத்திரம் வைத்திருந்த செல்வத்தினை வைத்து காலத்தை ஓட்டி விட்டு மிகுதிக் காலத்தில் ஒன்றுமேயில்லை என கையை விரித்து விட்டு தொழில் அற்றவனாக குடும்ப செலவுகளுக்கான வருமாதத்தை பெற முடியாதவனாக வாழ்பவர்களை மனைவி மட்டுமா சமூகம்தான் மதிக்குமா? என்றால் எவரும் மதிக்கமாட்டர்கள் ஆக இங்கே பொருளாதாரம் எனும் பிரச்சினை பூதாகரமாக அன்னியோன்னியமாக வாழ்ந்த தம்பதிகளிடையே மன விரிசல்களை உண்டு பண்ணுகிறது. 

இருவரிமன் எதிர்மறை வாதங்கள் ஒவ்வாமையாகி கோபம் கொள்ள வைக்குமே அன்றி இன்பத்தினை தராது இதற்கெல்லாம் மூல காரணம் அவர்கள் வாழும் சூழலின் தன்மைகளின் பிரதிபலிப்பேயன்றி வேறில்லை எனலாம்.

இவ்வாறான விடயங்கள் உதாரணமாகத்தான் இங்கே குறிப்பிடுகிறோம்;அதே வேளை கணவனானவர் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் இவ்வாறுதான் செய்ய வேண்டும் என ஒரு எதிர்பார்ப்போடு இருந்திருப்பார் மனைவியும் தன் கணவனானவர் இவ்வாறுதான் இருக்க வேண்டும் இப்படித்தான் நடக்க வேண்டும் என இருவருமே தங்களுக்குள்ளாகவே வரையறை செய்து கற்பனையில் கரம் பிடித்திருப்பார்கள் ஆனால் அவர்கள் இருவருமே எதிர்பார்ப்பதுதான் தவறாகும் ஏனெனில் இருவரும் வெவ்வேறு பட்ட சூழலில் இருந்து வளர்ந்து வந்தவர்களாகையால் நாம் முன்னமே கூறியபடி அச்சூழலின் குணம் தன்மை பண்புகளே அவர்களிடம் குடி கொண்டிருக்கும் ஆரம்பத்தில் சகித்துக் கொண்டு வாழ்வினை நடாத்தினாலும் காலப் போக்கில் சந்தர்ப்பம் பார்த்து அவர்களது சுய குணம் தன்மை பண்புகளை வெளிப்படுத்துவார்கள் அவை ஆளாளுக்கு வித்தியாசப் படும் போதுதான் சிக்கல்கள் தோன்றுகின்றன; இருவரில் ஒருவர் மனத் தெளிவுடன் பொறுமை சகிப்புத் தன்மை விட்டுக் கொடுப்புகள் மூலம் மற்றயவரின் எதிர்மறையான எண்ணங்களை சமாளித்து வாழும்போது அங்கு எதிர்மறை எண்ணத்தின் பலம் குறைவடைந்து நல்லெண்ண பிரவாகமானது மெல்ல மெல்ல தோற்றம் பெறும் போது ஏற்பட்ட விரிசலும் சுருங்கி கொண்டே வந்து இருவரும் சௌபாக்கியம் நிறைந்த வாழ்வினை கடைப்பிடிப்பார்கள் இதனையே இல்லற தர்மம் என எம் முன்னோர்களான சித்தர்கள் ஞானிகள் ரிஷிகள் வகுத்து வைத்துள்ளார்கள். 
                             அகஸ்திய மா மகரிஷி (முதல் தலைமுறை)

ஆதிகாலத்தில் ஒரு குருவை நாடி அவரது ஆசிரமத்தில் தமது குழந்தைகளை  சில ஆண்டுகள் தங்கவைத்து குருவிடம் ஆன்மீக சாதனைகளைப் பயின்று வாழ்க்கை முறைகளை கற்றுணர்ந்து மனதளவில் பலத்தினை பெற்று உள்ளுணர்வு சக்தியினை உணர்ந்தவர்களான பின்னர் குறித்த வயது வந்த பின்னர் தாய் தந்தையரின் வழிகாாட்டலில் இல்லற வாழ்வில் ஈடுபடுகிறார்கள் அதனால் ஆளுக்காள் விட்டுக் கொடுப்பு பொறுமை சகிப்புத் தன்மையோடு வாழ்ந்தார்கள் சிறிய வருமானம் தரும் தொழிலோடு இருந்தாலும் பல குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள் அனைவரையும் சிறந்தவர்களாக வளர்த்தெடுத்தார்கள் மிகவும் இன்பமான நோய் நொடியற்ற பெருவாழ்வினை வாழ்ந்தார்கள். 

அன்று வைத்தியசாலைகளோ வைத்தியர்களோ கிடையாது உண்ணும் உணவே மருந்தாகியது உடல் உழைப்பு இருந்தது நோய் என்பதனை அறியாதவர்களாக நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார்கள் பல மாதங்கள் வருடங்களுக்கு ஒரு முறைதான் எங்காவது வயது முதிர்ந்த மரணங்கள் நிகழ்ந்து; ஆனால் இன்றோ நாம் கூறவே தேவையில்லை தீர்க்க முடியாத தொற்று நோய்கள் திடீர் விபத்துக்கள் மரணங்கள் என நாளுக்கு நாள் வைத்திய சாலைகளும் வைத்தியர்களும் நோயாளிகளும் பெருகிக் கொண்டே போகிறார்களே தவிர எதுவும் குறைந்த பாடில்லை காரணத்தையும் யாரும் ஆராய்ந்து தெளிந்து நடைமுறைப்படுத்திட முன்வருவதும் கிடையாது இதனாலேதான் அனைத்து வகையிலும் மனிதர்கள் பின்தங்கிக் கொண்டே போகிறார்கள் புதிய விஞ்ஞான கண்டு பிடிப்புகள் நோய் நிவாரணிகள் நவீன வாழ்க்கை என எதனைக் கண்டு பிடித்தாலும் மன அழுத்தத்திலிருந்தும் சுகமான வாழ்வினையும் மனிதர்களால் ஏன் பெற முடியவில்லை? காரணம் மனிதர்கள் இறை வழியில் தன் மனதை சாய்த்து வெற்றி பெற முயலாமைதான் தோல்விகளுக்கு மூல காரணமாக இருக்கிறது என்பதுதான் பேருண்மை.

இவ்வாறான மனிதர்கள் மனம் மூலம் உள்வாங்கி செயலாக வெளிப்படுத்தும் எதிர்மறையான செயற்பாடுகளே இயற்கை சீற்றத்திற்கும்,தனி மனிதர்களிடேயேயான பிரச்சினைகள், இல்லறவாழ்வில் பிரச்சினைகள்,குடும்ப பிரச்சினைகள், மாறுபட்ட இரு சமூகங்களிடையே மோதல்கள், மதச் சண்டைகள், இனச் சண்டைகள்,அரசியல் குழப்பங்கள்,நாடுகளுக்கிடையே மோதல்கள் என பூதாகரமான சிக்கல்களை தோற்றுவித்து இறுதியில் அனைத்தையும் சூனிய மயமாக்கி விட்டு வேடிக்கை பார்க்கிறது விதி எனும் பேரரக்கன்.
                                  ஸ்ரீ கண்ணையா யோகி மகரிஷி (இரண்டாவது தலை முறை)

இவை ஏன் நிகழ்ந்தது எனில் தனி மனித மனதில் ஏற்பட்ட விகாரத்தினை போன்று அனைத்து மனித மனங்களிலும் இவ்வாறான கோப குரோத செயல்களை உண்டு பண்ணும் எதிர்மறையான எண்ணங்கள் அலைக்கழிவதே மூல காரணமாக அமைகிறது என்பதனை உணர முடிகிறதல்லவா! இதற்குத்தான் பகுத்துணரும் தன்மையினை மனிதர்கள் வளர்த்துக் கொள்வார்களேயானால் இனி வரும் காலங்களில் நேரான சிந்தனைகளை உள்வாங்கி நேர்மையான மனிதர்களாக வாழ்வது மட்டுமல்லாது ஏனையவர்களின் மனதிலே நல்லெண்ணத்தினையும் விதைத்திடுபவர்களாக இருப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை இந்த வாழ்க்கையினைத்தான் பல யுகங்களாக மனித மனதினை நேரான சிந்தனையின்பால் இயக்கவல்ல பிரபஞ்ச சக்தியான பரமாத்மா மண்ணுலகில் பிறப்பெடுத்து வழிகாட்டுவதனையே அவதாரம் என்கிறோம். 

அவ்வாறான அவதாரமெடுத்து வருபவர்களே மனிதர்களை நல்வழிப்படுத்தி நல் மார்க்க சீலர்களாய் உருவாக்கிடவே மதங்கள் மார்க்கங்கள் சமயத் தலங்கள் மார்க்க வழிபாட்டு முறைகள் புராணங்கள் இதிகாசங்கள் மார்க்கங்களை சரியாக கடைப்பிடித்திட அவற்றினை உணர்த்தும் விதமாக நூல்கள் பொது மறைகள் என தோற்றுவித்தார்கள் ஆனால் தற்கால மனிதர்களோ கடவுள் எனப்படுபவர் வேறு மனிதர்களான நாம் வேறு என்ற நிலைப்பாட்டிலே மனதை செலுத்தி விட்டார்கள் கடவுள் எனப்படுவதுத ஆழ்மனச் சத்தியாக நம் ஒவ்வொருவரினுள்ளும் இருந்து மனித உடலினை இயக்கும் ஆன்மாதான் என்பதனை உணர மறுக்கிறார்கள் மனிதன் இறைவனை தன்னிலிருந்து வேறுபடுத்தியதன் விளைவே அவனது எதிர்மறையான எண்ணங்களும் செயல்களுமாக இன்று உலகினையே அழிக்கவல்ல பெரும் தீய சக்திகளாக அணுவாயுதங்களாக தோற்றம் பெற்றுள்ளது எனலாம்.
                  பகவான் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகள் (மூன்றாவது தலை முறை)

இவற்றினை வெல்ல வழியில்லையா? 

நிச்சயமாக உண்டு; இது வரைக்கும் அனைத்து சிக்கல்கள் அவற்றில் புறக் காரணிகளின் தாக்கம் எவ்வாறு நிகழுகிறது அவற்றை எதிர் எவ்வாறு வாழ்ந்தால் வெற்றி காணலாம் என்றெல்லாம் மேலே கூறி வந்துள்ளோம் ஆனால் இவற்றையெல்லாம் நமக்கு இத்தனை தெளிவாக எவருமே இதுவரைக்கும் சொல்லித்தராத விடயங்களை மிக இலகுவாக பாமர மக்களுக்கும் புரியும் வகையிலே உபதேசிப்பவர் யார்? 

அவர் எங்கிருக்கிறார் என்றெல்லாம் நாம் சிந்திக்கவில்லை சற்றே சிந்தித்தோமானால் எம்மையெல்லாம் ஆட் கொண்டு வழிநடாத்திட குரு மார்க்கத்தில் மக்களோடு மக்களாக பிறந்து உலக துன்பங்களையும் அதன் சுமைகளையும் அனுபவித்து அதிலிருந்து விடுதலை பெற்று தன்னை நாடி வருபவர்களையும் துன்பங்களிலிருந்து விடுவித்திட இவ்வாறான ஆன்மீக அரிய பொக்கிசமான மனதினைப்பற்றிய மறைக்கப்பட்ட குப்த வித்தை எனப்படும் ஆன்மீக சாதனைகளை இன மத பேதமின்றி எல்லா மக்களும் ஒன்றே எனும் அடிப்படையில் அனைவரும் கடைtப்பிடித்து ஒழுகிடும் படியான விளக்கங்களை தருபவர்தான் உண்மையான ஞானகுரு அவர்தான்ஆன்மீக குரு அவர்தான் மகா யோகி புண்ணிரெத்தினம் சுவாமிகள்.
                                 மகா யோகி ஸ்ரீ புண்ணியரெத்தினம் சுவாமிகள் (நான்காவது தலைமுறை)

கட்டணம் செலுத்தி தரிசனம் வழங்கும் போலிகள் உலாவும் இதே உலகத்தில்தான் எந்த வித எதிர்பார்ப்புகளுமின்றி தன்னை நாடி வருவோர் அனைவரையும் ஆதரித்து அன்புகாட்டி அருளூட்டி ஞான மொழியுரைத்து வாழ்வின் அனைத்து துன்பங்களும் நீங்கி வாழ்வாங்கு வாழ்ந்திட வைத்திடும் குருவின் திருவடியினை இறுகப் பற்றிக் கொள்வோமாக ஏனெனில் வழிகாட்டியற்ற வாழ்வும் கலங்கரை விளக்கினை காணாத கப்பலும் கரை சேர்ந்ததாக சரித்திரமில்லை.

"வாழ்க வளமுடனும் நலமுடனும்"

No comments

Powered by Blogger.