ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சுதந்திர கட்சியின் வலி-தெற்கு பிரதேச சபையின் உறுப்பினரின் கருத்து.விரைவில் நடைபெறும் என பலராலும் எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சிறீ லங்கா சுதந்திர கட்சியின் வலி-தெற்கு பிரதேச சபையின் உறுப்பினர் செல்வி செ.காயத்திரி அவர்கள் கருத்து வெளியிடும் போது,

ஜனாதிபதி தேர்தலும் மாகாண சபை தேர்தலும் போட்டி போட்டு கொண்டு நிற்கும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி தேர்தல் முதலில் நடக்க விருக்கிறது.அதை தொடர்ந்து மாகாண சபை தேர்தலுக்காக களம் இறங்க பல வேட்பாளர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் வேட்பாளர்களில் 80 வீதமானோர் மக்களின் வாக்குகளை எப்படி பெற்றுக்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். தேர்தல் நேரம் மட்டும் காசு கொடுத்து பிரச்சார வேலைகளில் ஈடுபடுத்துவார்கள்.மது வாங்கி கொடுப்பதாகவும். அதன் பிறகு அக்குடும்பங்களையே திரும்பி பார்க்க மாட்டார்கள். மக்கள் யார் தங்களிற்கு சேவை செய்வார்கள் என்று ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும். மது மற்றும் பணம் கொடுத்து ஏமாற்றும் வேட்பாளர்களை மக்கள் ஆராய்ந்து புறக்கணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.