இன்று புலமைப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு காதர் மஸ்தான் வாழ்த்து.


புலமைப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வெளியிட்டுள்ள முகப்புத்தகப் பதிவில்,

இன்று தரம் ஐந்து புலமைப் பரீட்சைக்கு தோற்றும் மாணவச் செல்வங்களான உங்களை மனதார வாழ்த்துவதுடன் நேரகாலத்துடன் பரீட்சை மண்டபங்களுக்குச் சென்று அமைதியாக ஆறுதலாக இருந்து பரீட்சையை எழுதுமாறு உங்களுக்கு அன்புடன் உபதேசிக்கிறேன்எனவும்

இத்தருணத்தில் பிள்ளைகளின் மனம் நோகாமலும் அவர்கள் மீது எந்தவித உடல் உள அழுத்தங்களும் நேர்ந்து விடாமலும் இருக்க பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு சகலரையும் கேட்டுக் கொள்கிறேன் எனவும்

அன்பார்ந்த மாணவச் செல்வங்களே!

உங்களது எதிர்காலம் ஒளிமயமானதாக விளங்க உளம் நிறைந்து பிரார்த்திக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.