கேரள கஞ்சாவுடன் மூவர் கைது:யாழில் சம்பவம்.

யாழ் காங்கேசன்துறை பகுதியில் சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே  குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 84 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக ​பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.