மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடைபெற்ற நல்லைக் கந்தனின் கொடியேற்றம்.

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா இன்றைய தினம் செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி மாலை 5 மணிக்கு வைரவர் உற்சவத்துடன் திருவிழா நிறைவுக்கு வரும்.திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் சோதனைகள் அமைக்கப்பட்டு மறைகாணிகளும் பொருத்தப்பட்டுள்ளன. ஆலயச் சூழலில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆலயத்துக்கான வீதிகளில் வாகனத் தடைகள் ஏற்படுத்தப்பட்டு, மாற்று வீதி ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.







No comments

Powered by Blogger.