யாழில் தியாக அறக்கொடை நிதியத்தின் மற்றுமோர் மனித நேயப் பணி..

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ் நல்லூர் வருடாந்த மகோட்சவம் ஆரம்பித்துள்ள நிலையில் நல்லூர் பருவகால திருவிழாலின் மூலம் நடைபெறும் விற்பனையை நம்பி பல சிறுவியாபாரிகள் கடனை வாங்கி வியாபாரத்தை செய்து வருகின்றனர்.

அந்த    வகையில் நல்லூரில் கச்சான் வியாபாரிகள் ஏனைய சிறுகடை                ( பெட்டிக்கடை) வியாபாரிகள் வட்டிக்கு பணத்தை கொள்வனவு செய்து விற்பனைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இவர்களின் ஒவ்வொரு நாள் வியாபாரமும் பதற்றத்துடனும் ஊசல் போலவும் ஆடி வருகின்றது.

அவ் வகையில் இவர்களது இன்னலை இன்முகம் கொண்டு நீக்கி வைத்துள்ளார் தியாகி அறக்கொடை நிதியத்தின் நிறுவுனரும் தலைவருமான வாமதேவா தியாகேந்திரன் அவர்கள்;!!

கடன் வாங்கி தொழில்களைச் செயயும் சிறுவியாபாரிகளி்ன் கடனை மனிதாபிமானத்தின் அடிப்படையில் அவரே மீளச்செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இத் திட்டத்தின் முதல் கட்ட பணியானது நேற்றைய தினம் இடம்பெற்றது. இதில் வாமதேவா அவர்களால் முதலில் மூன்று உழைப்பாளிகளிற்கான கடன் உதவிக்கான நிவாரணம் வழங்கப்பட்டது. யாழ் மாநகர சபைக்கு கேள்வி தொகையின் மீதியுள்ள கட்டணத்தை செலுத்த முடியாமல் இருக்கும் சிலருக்கும் இந்த உதவிகள் கிடைக்கப் பெறஉள்ளது.

மேலும் அடுத்தடுத்த கட்டங்களாக இப் பணி நடைபெற உள்ளது. மேலும் அடுத்தடுத்த வியாபாரிகளை வாமதேவா தியாகேந்திரன் அவர்கள் தேர்ந்தெடுத்து வழங்கிவைப்பார் என தெரிவிக்கப்படுகிறது.