மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


கயிற்றில் தொங்கி விளையாடிய சிறுவனுக்கு நிகழ்ந்த விபரீதம்; சோகத்தில் குடும்பத்தினர்!!

வீட்­டில் உள்ள கயிற்­றில் தொங்கி விளை­யா­டிய சிறு­வன் அதில் சிக்­கிக் கொண்டு பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ளான்.

யாழ்ப்­பா­ணம் தெல்­லிப்­ப­ழை­யைச் சேர்ந்த சிவ­பா­லன் அச்­ச­யன் (வயது-11) என்ற மாண­வனே இவ்­வாறு பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ளான்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் இறப்பு விசா­ர­ணை­யின் போது உற­வி­னர்­க­ளால் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:

கடந்த 24ஆம் திகதி வீட்­டில் கட்­டப்­பட்­டி­ருந்த இரு கயிற்­றைப் பிடித்து சிறு­வன் விளை­யா­டிக் கொண்­டி­ருந்­துள்­ளான். அவ­னது தாயார் விளை­யாட வேண்­டாம் என்று அறி­வு­றுத்­தி­யுள்­ளார் அதன் பின்­னர் தாயார் மதிய உணவு தயா­ரிப்­பில் ஈடு­பட்­டுள்­ளார்.

சிறிது நேரத்­தில் சிறு­வனை அழைத்­த­போது அவ­னது சத்­தத்­தைக் காணவில்லை என்று விளை­யா­டிய இடத்­தில் தேடி­யுள்­ளார்.

இதன்­போது சிறு­வ­னது கழுத்­தில் கயிறு இறு­கி­யி­ருப்­பதை தாயார் கண்டுள்ளார் உட­ன­டி­யாக தெல்­லிப்­பழை மருத்­து­வ­ம­னைக்கு எடுத்­துச் சென்றுள்­ள­னர்.

சிறு­வன் மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பாண போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டான்.

சிகிச்சை பய­னின்றி சிறு­வன் நேற்று உயி­ரி­ழந்­துள்­ளான்.

சிறு­வ­னின் இறப்பு விசா­ர­ணையை யாழ்ப்­பா­ணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசா­ரணை அதி­கார நம­சி­வா­யம் பிறேம்குமார் மேற்­கொண்­டார்.

No comments

Powered by Blogger.