மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை வவுனியா விஜயம்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளையதினம் வவுனியா பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டடம் ஒன்றை திறந்து வைப்பதற்காக வவுனியாவிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா வைத்தியசாலையில் இரண்டாவது சுகாதாரதுறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கபட்ட விபத்து மற்றும் அவசரசிகிச்சை பிரிவை மக்கள்பயன்பாட்டிற்கு கையளிப்பதற்கும், நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இலகு கடன் உதவியில் அமைக்கப்படவுள்ள இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் நாளை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளது.


குறித்த நிகழ்வில் சுகாதாரஅமைச்சர் ராஜித சேனாரத்தின,நெதர்லாந்து துனைதூதுவர் ஈவா வான்வோசம் , வடமாகாண ஆளுனர் சுரேன் இராகவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.