மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு இராணுவத் தளபதி திடீர் விஜயம்!!!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோட்சவம் நடைபெற்றுவரும் சூழலில் இன்றையதினம் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

குறித்த விஜயமானது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே நேரடியாக வருகை தந்ததுடன் அவர்  பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார். 

இதன் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க, 

அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கும் செயற்பாட்டில் இலங்கை பொலிஸாரும் இராணுவம் தலைமையிலான கடற்படையினரும் விமானப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். அதனால் இங்கு வருகை தரும் பக்தர்கள் பாதுகாப்பு தொடர்பில் அச்சமடைய வேண்டியதில்லை எனவும்

பிரச்சினைகள் ஏற்படாதிருக்கவே இவை அனைத்தையும் முன்னெடுத்துள்ளோம். உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பில் அவதானிக்கும் போது, அந்த நிலைமை தற்போது காணப்படவில்லை என கூறமுடியாது. அதனை Lone Wolf Attackஎன கூறலாம். தனியான நரியினால் எதனையும் செய்ய முடியும். பைத்தியக்காரர் ஒருவருக்கு ஏதேனுமொன்றை செய்ய முடியும். அவர்களிடம் இருந்தும் உங்களைக் காப்பாற்றவே இதனை செய்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.