மோடிக்கு நன்றி கூறிய ரணில்;

கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் 260 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர் இந்தியர்கள்.இந்நிலையில் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கை விசாரித்துவரும் இலங்கையின் அதிகாரிகளுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அறிவித்தது.

இந் நிலையில் இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் இந்தியா அளித்துவரும் உதவிகள் அனைத்துக்கும்இ பிரதமர் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்று தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தவும் அரசு சட்டத்திருத்தம் செய்து என்.ஐ.ஏக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியது. மேலும் இலங்கைக்குச் சென்ற பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்.

இவ்வழக்கில் இலங்கை அரசு விசாரணைக்கு இந்திய உளவுத்துறையினர் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் மோடியின் வருகையால் இலங்கைக்கு புதிய நம்பிக்கையும் ஊக்கமும் கிடைத்திருப்பதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.