மஹிந்தவின் சுதந்திரக் கட்சி உறுப்புரிமை தொடர்பில் விசேட அறிவிப்பு!!!

முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. 

இதனால் மஹிந்த ராஜபக்ஷவின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்றையதினம் இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பிலேயே இவ்விடயத்தை கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சுதந்திரக் கட்சி உறுப்புரிமையானது கட்சி யாப்பின் பிரகாரம் மாற்று கட்சியில் உறுப்புரிமையையும் பதவியையும் பெற்றுக்கொண்டதற்கு அமைய இயல்பாகவே இரத்தாகியுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.