பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ் விஜயம்!!!

மூன்று நாள் விஜயமாக வடக்கிற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்றையதினம் நல்லூர் ஆலயத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பூஜை வழிபாடுகளிளும் கலந்துகொண்டார்.

அதன் பின் நல்லை ஆதீனத்திற்கு விஜயம் மேற்கொண்டு இந்துமத தலைவர்களுடனான சந்திப்பிலும் கலந்து கொண்டார்.

குறித்த நல்லூர் விஜயத்தின்போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் பிரதமரின் செயலாளர் சிவஞானசோதி மாநகர ஆணையாளர் யாழ்ப்பாண பிரதேச செயலர் மற்றும் அரசு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.









No comments

Powered by Blogger.