ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அசாத் சாலி;கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி,

'ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக தற்போது கோட்டாபய ராஜபக்ஷ களமிறக்கப்பட்டுள்ளார்.எனினும், வேட்புமனுத் தாக்கல் செய்யப்படாமையால் இவர்தானா இந்தக் கட்சியின் வேட்பாளர் என்று இன்னும் உறுதியாகக் கூறமுடியாதுள்ளது எனவும்எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்ஷவை நாம் ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் கோட்டாபய ராஜபக்ஷ முன்வந்து, கீத் நொயாரை தாக்கவில்லை, லசந்த விக்ரமதுங்கவைக் கொல்லவில்லைஇ, ரத்துபஸ்வெலவில் தண்ணீர் கேட்டவர்களை ராஜபக்ஷவினர் கொல்லவில்லை என்று கூறுவாறாரா?மேலும், காலி முகத்திடல் நிலங்களை ஷங்ரிலாவுக்கு விற்றபோது, அவரை எதிர்க்க யாருக்கும் தைரியம் இருக்கவில்லை. இவற்றையெல்லாம் அவரால் மறுக்க முடியுமா?- இல்லை.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியாது. இரண்டாம், மூன்றாம் சுற்று,வாக்குகளை எண்ண வேண்டியிருக்கும்.

எனவே, மக்கள் இந்தத் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் இன்னும் அனைத்துக் கட்சிகளுடனும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். கோட்டாவிடமுள்ள அவசரம் எமக்கு இல்லை. இந்தப் பேச்சுவார்த்தைகளின் இறுதியில் அனைவரும் ஒன்றிணைந்தே ஒரு வேட்பாளரை களமிறக்குவோம்.

அந்த வேட்பாளரிடம் நாம் ஒப்பந்தமொன்றை செய்துக்கொண்ட பின்னரே ஆதரவளிப்போம். இதனை நாம் இம்முறை நிச்சயமாக மேற்கொள்வோம்.

எவ்வாறாயினும் கோட்டாபய ராஜபக்ஷ ஒருபோதும் இந்தத் தேர்தலில் வெற்றிபெற மாட்டார் என்பது உறுதியான விடயமாகும். தவறிக்கூட அப்படியானதொரு தவறினை மக்கள் செய்ய மாட்டார்கள்' என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.