வடக்கு கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு!!!


முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி ம.ஈஸ்வரி அண்மையில் ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போது,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 890 ஆவது நாளாக தொடர்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம், எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அன்று வடக்கில் உறவுகளை கையளித்த இடமான ஓமந்தையிலும் கிழக்கில் கல்முனையிலும்,மாபெரும் போராட்டம் ஒன்றினை நடத்தவுள்ளோம் எனவும், எனவே அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்கள்.