மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


ஜனாதிபதித் தேர்தலில் இந்த வேட்பாளருக்குதான் தனது ஆதரவு- அத்துரலிய ரத்ன தேரர்.

ராஜகிரியவில் சந்தஹம் செவனவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்கப் போகிறேன் என்பதை விரைவில் அறிவிப்பதாகவும் நான் உட்பட நாட்டைக் காக்கும் சிவில் அமைப்புக்கள் அனைத்தும் ஆதரவு வழங்கும் வேட்பாளர், அடிப்படைவாதத்தை தோற்கடிப்பவராகவும், மதுரஸா பாடசாலைகளை மூடிவிடுபவராகவும்இ காஸி நீதிமன்றங்களுக்குப் பகரமாக நாட்டின் நீதிமன்றத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுப்பவராகவும், சரீஆ பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குபவராகவும் இருப்பார் எனவும் தேரர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் வேட்பாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் முடிந்தளவு விரைவாக ஜனாதிபதித் தேர்தலுக்குச் சென்று தற்போதைய அரசாங்கத்தை துரத்தியடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், எதிர்வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடத்தைப் படிப்பிப்பார்கள் எனவும் தேரர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.