மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


மட்டு- கல்முனை வீதியில் கோர விபத்து; மூவர் ஸ்தலத்திலேயே பலி!!

மட்டக்களப்பு கல்முனை வீதியில் சற்று முன்னர் அதிகாலை 4-4:30 மணியளவில் (11/08/2019) பயணித்த கோழி ஏற்றி வந்த பட்டா ரக வாகனம் ஒன்று முன்னால் சென்ற மண் கல் ஏற்றும் கன்ரர் ரக டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு கோழியேற்றி வந்த பட்டா ரக வாகனத்தில் பயணித்த மூவரும் ஸ்தலத்திலேயே பலியாகினர்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக எமது செய்தியாளர் விபரிக்கையில்...

இன்று அதிகாலை ஏறாவூர் பகுதியினை சேர்ந்த வழமையாக காத்தான் குடி பகுதிகளில் கோழி விற்பனை செய்யும் நபர்களே இவ்வாறு விபத்தில் மரணித்துள்ளதாக அறிய முடிகிறது இவர் மட்டு நாவற்குடா பிள்ளையாரடி பிரதான வீதியில் ஏறாவூர் பகுதியில் இருந்து காத்தான் குடி நோக்கி அதி வேகமாக பயணித்த வேளையில் துரதிஸ்ட வசமாக முன்னால் பயணித்து கொண்டிருந்த டிப்பர் ரக வானத்தின் பின் பகுதியில் அவதானமின்மை அல்லது தூக்க கலக்கத்தில் இந்த கோர விபத்தானது ஏற்பட்டுள்ளதாகவும் விபத்தின் பின்னர் அவ்விடம் விரைந்த பொதுமக்கள் அவசர ஊர்திக்கு அறிவித்து பின்னர் பொலிசாருக்கும் விடயத்தினை தெரிவித்தனர். தற்போது ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருவதாகவும் விபத்தில் இறந்த சாரதி உட்பட இரண்டு பயணிகளினது சடலங்களும் மட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.