மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


மங்களவின் கருத்துக்கள் கவலையளிக்கின்றதாம்- நாமல்

பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோட்டாபய அறிவிக்கப்பட்ட நிலையில் அது குறித்து கருத்து வெளியிட்ட நிதியமைச்சர் மங்கள சமரவீர,

'காட்டுமிராண்டிகள் நுழைவாயிலில் உள்ளார்கள். வெள்ளைவான் கலாசாரத்தை பிரதானமாகக் கொண்ட ராஜபக்ஷ யுகத்தின் முக்கிய அடையாளமான 'அருவருக்கத்தக்க அமெரிக்கர்' ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தை இன்று ஆரம்பிக்கிறார். அந்தத் தனிமைப்படுத்தப்பட்ட இருண்ட இறந்தகாலத்திற்குள் இலங்கையர்கள் மீண்டும் நுழைய வேண்டுமா?' என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு பதில் வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ,

அரசியலைப் பொறுத்தவரையில் விமர்சனங்கள் அதன் ஓரங்கம் என்ற போதிலும் காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் வகையிலும்,பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் நோக்கிலும் அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்துக்கள் அமைந்துள்ளமை கவலையளிப்பதாக தெரிவித்திருக்கிறார்.

No comments

Powered by Blogger.