யாழில் சுய தொழில் ஊக்குவிப்பு கண்காட்சி.

யாழ் தென்மராட்சி கைதடி மேற்கு சரஸ்வதி இளைஞர் கழகத்தால் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு சுயதொழில் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் நடாத்தப்பட்ட கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வானது நேற்றையதினம் சரஸ்வதி வைரவிழா மண்டபத்தில் இளைஞர் கழக தலைவி செல்வி.ஜெ.வினுஜா தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் விருந்தினர்களாக J/293 கிராம சேவகர் சி.தர்மினி,சாவகச்சேரி பிரதேச இளைஞர் சம்மேளன தலைவர் செல்வன்.சு.நக்கீரன், சரஸ்வதி சனசமூக நிலையத்தின் உபதலைவர் ஞா.கிருபதீசன், கைதடி தென்மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி திருமதி கெ.தயார்னி ஆகியோரும் கலந்து கொண்டனர்.