கிண்ணியா மற்றும் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டி கையளிப்பு.

கிண்ணியா மற்றும் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்களின் முயற்சியின் பயனாக பென்ஸ்ரக அம்பியூலன்ஸ் வண்டி கையளிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.

சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், அமைச்சின் செயலாளர் திருமதி வசந்தா பெரேரா, மேலதிக செயலாளர் சந்திர குப்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.No comments

Powered by Blogger.