சிறுமியுடன் குடும்பம் நடத்தியவருக்கு ஏற்பட்ட நிலைமை!!!

ஜா எல பகுதியைச் சேர்ந்த பதின்ம வயது சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று, அச்சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்த 22 வயதுடைய நிக்கவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் நிக்கவெரட்டிய நீதிமன்றத்தில் குறித்த இளைஞர் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவ்விளைஞரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  நிக்கவெரட்டிய நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்

 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த இளைஞர் ஜா – எல பிரதேசத்தில் தொழில் புரிந்து கொண்டிருந்தபோது, அப்பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த சிறுமியை ஏமாற்றி நிக்கவெரட்டியவில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ள சந்தேக நபர், அங்கு அச்சிறுமியுடன் குடும்ப வாழ்வில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதன் காரணமாக, குறித்த சிறுமி தனது பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிக்கவெரட்டிய பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.